பள்ளிக் கல்வி - அரசு உதவிபெறும் பள்ளிகள் - பணியாளர்
நிர்ணய அறிக்கையின்படி. அனுமதிக்கப்பட்ட நிரப்பத் தகுந்த இடைநிலை ஆசிரியர் காலிப்
பணியிடங்களை தரம் உயர்த்துதல் / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பாடமாற்றம்
செய்வது தொடர்பாக நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது.
ஆணை:-
மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின்
கடிதத்தில், ஒவ்வொரு கல்வியாண்டும் ஆகஸ்ட் 1-ஆம் நாள் நிலவரப்படியான மாணவர்
எண்ணிக்கையின் அடிப்படையில், மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை (நிலை) எண்.
525, பள்ளிக்கல்வித் (டி1) துறை, நாள். 29.12.1997.இன்படி, அரசு நிதி உதவி பெறும்
உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1991-92ம் ஆண்டிற்கு முன் அனுமதிக்கப்பட்ட
பிரிவுகளுக்கு நடைமுறையிலுள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்காற்றுதல் சட்டம்
மற்றும் தொடர்புடைய விதிகளின் கீழ் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் பணியாளர்
நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டு வருகிறது என்றும், மேலே இரண்டாவதாகப்
படிக்கப்பட்ட அரசாணை (நிலை) எண். 144, பள்ளிக் கல்வித்(டி1) துறை, நாள்.
04.07.2008-இன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 10 வகுப்புகளை ஒரே அலகாகக்
கொண்டு இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக காலியேற்படும்போது, அப்பள்ளியின்
தேவை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேவையான பாடத்தில் பட்டதாரி ஆசிரியர்
பணியிடமாக பாடமாற்றம் செய்திட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்
வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும், இவ்வரசாணையில் ஒருமுறை பாடநிலை (தமிழ்,
ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்துப் படித்திட இங்கே கிளிக் செய்யவும்

إرسال تعليق