6 ந.க.எண் 069824/பிடி2/இ2/2024, நாள் 28.01.2025.
பொருள்: பள்ளிக் கல்வி - அரசு மாதிரிப் பள்ளிகளில் பயின்ற கலந்துரையாடல் 01-02-2025 சனிக்கிழமை முன்னாள் மாணவர்களுடனான கருத்தரங்கு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான நிகழ்வு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துதல் தொடர்பாக.
பார்வை : 1
G.O. (Ms.) No. 164, School Education (SSA1) Department, dated 29.11.2021.
2 G.O.
(Ms.) No.138, School Education (SSAI) Department, dated 08.08.2022.
3 G.O. (Ms.)
No.210, School Education (SSA1) Department, dated 18.11.2023.
4 தமிழ்நாடு மாதிரி
பள்ளிகள் உறுப்பினர் செயலரின் கடிதம் ந.க.எண் 1 (2)/0180/மா.ப.2025, நாள்
24.01.2025.
"அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும்
விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக, சிறப்பு
திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்" என அறிவிக்கப்பட்டு அதனை
செயங்படுத்தும் விதமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி. கிருஷ்ணகிரி,
பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 10
மாவட்டங்களில் 2021 2022 ஆம் கல்வியாண்டு முதல் மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு
வருகிறது.
2. 2022-2023-ஆம் கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்துார், நீலகிரி,
திருவாரூர், சிவகங்கை, ஈரோடு. இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர்,
திருவள்ளூர், வேலூர், நாகப்பட்டினம், இராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 15 மாவட்டங்களில் 15 மாதிரிப் பள்ளிகளும் சென்னை
சைதாப்பேட்டையில் மாநில தகைசால் பள்ளியும் தொடங்கப்பட்டு மொத்தம் 16 மாதிரிப்
பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
3. 2023-2024-ஆம் கல்வியாண்டில் செங்கல்பட்டு.
காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பூர், நாமக்கள் கரூர். திண்டுக்கள் தேனி,
புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13
மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன்
தொடர்ச்சியாக மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்
வழிகாட்டுதல், உயர்கல்வி தேர்வு தொடர்பான கண்காட்சி மற்றும் மாதிரி பள்ளிகளில்
பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் குறித்த கலந்துரையாடல் ஆகியவை அனைத்து
மாதிரிப் பள்ளிகளிலும் 02.02.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அனைத்துவகை
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாவட்ட கல்வி
அலுவலர்கள் / முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் மாதிரிப் பள்ளிகளில்
பயின்ற முன்னாள் மாணவர்களின் அனுபவங்கள் தொடர்பான கருத்தரங்கு மற்றும்
கலந்துரையாடல் 01.02.2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் (2.00 - 5.00) மாவட்ட ஆட்சித்
தலைவர் அவர்களின் அனுமதியுடன் அன்னார் தலைமையில் நடத்திடவும் அக்கருத்தரங்கில்
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களை பங்கேற்க
அறிவுறுத்திடுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவவர்களும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணை இயக்குநர் (தொழிற்கல்வி)
25 பெறுநர்
அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
நகல்
உறுப்பினர் செயலர் தமிழ்நாடு மாதிரிப்
பள்ளிகள், சென்னை-6. அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
Post a Comment