இலங்கையில் உள்ள பள்ளிகளில் ஜனவரி தொடங்கி அந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் வரை ஒர் கல்வி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. 
அதன்படி அங்குள்ள பள்ளிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். 
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி வேலைநாட்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டின் (2025) கல்வி வேலை நாட்களுக்கான அட்டவணையை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 
அதில் பள்ளி வேலை நாட்களை 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைத்துள்ளது. திருத்தப்பட்ட இந்த அட்டவணை, அங்குள்ள அனைத்து அரசு-தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கு பொருந்தும். மேலும் வருகிற 27-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post