பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- 
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள் ஆய்வாளர், சட்ட
அதிகாரி, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், வட்டார
கல்வி அலுவலர் உள்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியிடங்களாக தொடர்
நீட்டிப்பு வழங்கப்பட்டு வரும் பல்வேறு பதவிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத 47
ஆயிரத்து 13 நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்படுகின்றன. அதேபோல், சமையலர்,
காவலாளி உள்பட 5,418 தற்காலிக பணியிடங்கள், ஒழிவடையும் பணியிடங்களாக தற்காலிகமாக
தொடரலாம். ஓட்டுனர், பதிவு உதவியாளர் ஆகிய 145 தற்காலிக பணியிடங்கள் மேலும் 5
ஆண்டுகளுக்கு தற்காலிகமாக தொடர் நீட்டிப்பு வழங்கப்படுகிறது. முதன்மை உடற்கல்வி
ஆய்வாளர் பணியிடங்கள் புத்தாக்கம் செய்யப்படும். இவ்வாறு அந்த அரசாணையில கூறப்பட்டு
உள்ளது.
 

Post a Comment