யு.ஜி.சி நடத்தும் நெட் தேர்வு வரும் 21ம் தேதி நடக்க உள்ளது என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது. இளநிலை ஆராய்ச்சி பெல்லோஷிப் விருது மற்றும் உதவிப் பேராசிரியராக நியமனம், உதவிப் பேராசிரியராக நியமனம் மற்றும் முனைவர் பட்டப்படிப்பில் சேர்க்கை, பிஎச்டி-க்கு மட்டுமான சேர்க்கை ஆகிய பதவிகளுக்கான தேர்வு இம்மாதம் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கணினி வழித் தேர்வுகளாக நடைபெற உள்ளது. 21ம் தேதி நடக்க இருக்கும் தேர்வுகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 27ம் தேதி நடக்கவுள்ள தேர்வுகள் மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடக்க உள்ளது. மேலும் விவரங்களுக்கு https://ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

Previous Post Next Post