தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. அன்றைய தினத்தில் பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, உடல் நலன் சார்ந்து சில விழிப்புணர்வு செயல்பாடுகளை நடத்திட தெரிவிக்கப்படுகிறது. 

1. பள்ளித் தலைமையாசிரியர் அல்லது ஏதேனும் ஒரு குழு பொறுப்பு ஆசிரியர் (House head teacher) "மாணவர் மனசு" திட்டம் சார்ந்து விளக்க உரை காலை வணக்கக் கூட்டத்தில் இடம் பெற வேண்டும். 

2. மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு (Student safeguarding Advisory Committee) பள்ளி அளவிலான குழுவில் 

தலைமை ஆசிரியர் 
ஆசிரியர்கள் -
பெற்றோர் ஆசிரியர் கழகம் / பெற்றோர் உறுப்பினர் - 2
 பள்ளி மோண்மை குழு பிரதிநிதி – 1 
ஆசிரியரல்லா பணியாளர் – 1 
வெளி நபர் (தேவை எனில்) - 1 இடம் பெற்றுள்ளனர். 

இக்குழு கூட்டத்தினை 24.01.2025 நடத்தி அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பிட வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post