மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றமா? மத்திய அமைச்சர் பதில் | Will the retirement age of central government employees change? Union Minister's reply!
அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம்?: மத்திய அமைச்சர் பதில் புது தில்லி,டிச.4: மத்திய அரசு ஊழி யர்களின் பணி ஓய்வு வயதை மாற்றும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய பணியா ளர் நலத் துறை இணையமைச் சர் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தார். 
இது தொடர்பாக மக்களவை யில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜிதேந்திர சிங் அளித்த எழுத்து பூர்வ பதிலில், 'மத்திய அரசு ஊழி யர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறார்கள். இதை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை. குடி மைப் பணிகளில் இளைஞர்க ளுக்கு அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவதில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. காலி பணியிடங்களை உடன டியாக நிரப்ப அமைச்சகங்கள் மற்றும் பிற அரசு துறைகளுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 
அதிக வேலைவாய்ப் புகளை உருவாக்க உதவும் வகை யில் ரோஸ்கர் மேலா (வேலை வாய்ப்பு முகாம்களை) மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படுகி றது. இது கல்வி மற்றும் சுகாதா ரம் உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் என்று குறிப்பிட்டிருந்தது.


Post a Comment

Previous Post Next Post