ஆளுநர் மாளிகை சார்பில் கட்டுரைப் போட்டிகள் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகை அறிவிப்பு 
மகாகவி பார தியாரின் பிறந்த நாளை முன் னிட்டு, ஆளுநர் மாளிகை சார் பில், நடத்தப்பட்ட மாணவர் களுக்கு இடையேயான கட்டு ரைப் போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.25,000 முதல் ரூ. 50,000 வரை பரிசுத் தொகை வழங்கப்பட வுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது. 

இது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு: மகாகவி பாரதியாரின் 143- ஆவது பிறந்த நாள் மற்றும் பாரதிய மொழிகள் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் மாளிகை சார்பில் பள்ளி மற்றும்கல்லூரி மாணவர்களுக்கு இடையே தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மாநில அளவி லான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த 2 பிரிவுகளிலும் முதல் 3 இடங்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் என மொத்தம் 18 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். 

இதில், முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை பரிசுத் தொகை வழங்கப் படவுள்ளது. அடுத்த ஆண்டு குடியரசு தினத்தன்று(ஜன.26)சென்னை ஆளுநர் மாளிகையில் நடை பெறவுள்ள விழாவில், ஆளு நர் ஆர்.என். ரவி வெற்றி பெற் றவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்களை வழங் கவுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم