புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.ஐ.
எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்ட், எஸ்.பி.ஐ. குவாண்ட் பண்ட் என்ற பெயரில் புதிய சேமிப்பு திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த திட்டம், டிசம்பர் 4-ந்தேதி முதல் 18-ந்தேதிவரை கிடைக்கும். நீண்டகால வளர்ச்சியை ேநாக்கமாக கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.5 ஆயிரம். அதிகபட்ச வரம்பு இல்லை. கூடுதல் முதலீட்டுக்கான குறைந்தபட்ச தொகை 1,000 ரூபாயாக உள்ளது. பண்ட் ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் முதலீட்டாளர்கள் வெளியேறினால், அவர்கள் 0.5 சதவீத வெளியேறும் சுமையை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment