தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான,
2024-25-ம் கல்வியாண்டு, ‘தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு' கடந்த அக்டோபர்
மாதம் 19-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 25 மாணவர்கள்
பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு
வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவெண் மற்றும்
பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறியலாம்.
Tags
TRUST EXAM
Post a Comment