வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அரையாண்டு தேர்வு நடத்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தீர்வுகள் காண்போம்
நூலகத்துறை சார்பில் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு 3-ம் நிலை பதவி உயர்வு வழங்கியதற்காக நன்றி தெரிவித்தல் மற்றும் பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
Download
அரையாண்டு தேர்வு
விழா முடிந்து வெளியே வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டும் செய்முறைத் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. அங்கெல்லாம் ஜனவரி மாதம் நடத்தி முடிக்க சொல்லி உள்ளோம். வருகிற 9-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அரையாண்டு பொதுத்தேர்வு நடக்கும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதன் அடிப்படையில்தான் தேர்வு நடக்க உள்ளது.
Download
ஜனவரி முதல் வாரம்
எங்கு அதிக பாதிப்பினால் தேர்வு எழுத முடியாத நிலை இருக்கிறதோ? அங்கெல்லாம் அதை சரிசெய்ய சொல்லியுள்ளோம். அப்படியும் தேர்வு எழுத முடியாமல் போகும் தேர்வுகளை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கிறோம்.
மாணவர்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அது முடிந்ததும் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment