ரெயில்வே பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வை ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்துகிறது. இந்த நிலையில் காலியாக உள்ள 18,799 ரெயில் என்ஜின் உதவி டிரைவர் பணியிடங்களுக்கான தேர்வை ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டது. 
TEACHERS WANTED
இதையடுத்து இந்த பணிக்காக நாடு முழுவதிலும் 22.5 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதற்கான தேர்வு நாடு முழுவதும் 346 மையங்களில் 18 மொழிகளில் நடக்கிறது. தேர்வுகள் கடந்த 25-ந் தேதி தொடங்கிவிட்டது. நாளை (வெள்ளிக்கிழமை) முடிகிறது. இதுவரை 13.5 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். மீதமுள்ள 9 லட்சம் பேர் அடுத்துவரும் நாட்களில் தேர்வு எழுத உள்ளனர் என ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post