தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடைய போதைப் பொருளின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர், பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்து, தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், போதைப் பொருள் எதிர்ப்பு குழு மற்றும் தன்னார்வலர்கள் அணி அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அரசாணையின்படி, ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும், போதைப் பொருள் எதிர்ப்பு குழு, தன்னார்வலர்கள் அணி உருவாக்கப்படும். 
மாவட்ட அளவில் கலெக்டர்கள் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உறுப்பினர் செயலாளராகவும், முதன்மை கல்வி அதிகாரி, மண்டல இணை இயக்குனர் (உயர்கல்வித்துறை), மாவட்ட நாட்டு நலப்பணி பொறுப்பு அதிகாரி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு அதன் செயல்பாடுகளை கண்காணிக்கும். மாநில அளவில், கூடுதல் காவல்துறை இயக்குனர், பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை கமிஷனர், துறை இயக்குனர், உறுப்பினர் செயலர் (எம்.எம்.யு) ஆகியோர் கொண்டு குழுக்கள் கண்காணிக்கப்படும். 
மாவட்ட, மாநில அளவில் சிறப்பாக பங்களிப்பை வழங்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு பரிசுத் தொகைகள் வழங்கப்படும். இதன்மூலம், விழிப்புணர்வு ஏற்படுத்தி போதை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post