‘சாட்டர்டு அக்கவுண்டன்ட்’ (சி.ஏ.) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வை இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் நடத்துகிறது. இந்த தேர்வில் அடிப்படைத் தேர்வுகள் (பவுண்டேஷன்) தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது அடிப்படை தேர்வுகள் நடைபெறும் நாளில் ஜனவரி 14-ந் தேதியும் இடம் பெற்று இருந்தது.
இந்த நாளில் தமிழ்நாட்டில் பொங்கல், ஆந்திரா, தெலுங்கானாவில் மகர சங்கராந்தி, வட மாநிலங்களில் பிஹு, லோக்ரி போன்ற அறுவடை பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதனால் அந்த தேர்வு தேதிக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த நிலையில் அந்த தேர்வுத்தேதியை சி.ஏ. நிறுவனம் மாற்றம் செய்திருக்கிறது.
Job News : BRO Recruitment: எல்லை சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு! சம்பளம் ரூ. 29,200 - 92,300/-
இதன்படி அன்றைய தேர்வு ஜனவரி 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. புதிய மாற்றத்தின்படி அடிப்படை தேர்வுகள் ஜனவரி 12, 16, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆனால் இன்டர் மீடியட் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

إرسال تعليق