அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு 
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (2024-25) நடப்பு கல்வி ஆண்டிற்கான வேளாண் பட்டப்படிப்பு (பி.எஸ்சி.) மற்றும் தோட்டக்கலை பட்டப்படிப்பு (பி.எஸ்சி) ஆகிய பிரிவுகளில் இருக்கும் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த மாணவர் சோ்க்கையானது வருகிற 21-ந்தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை அரசு விதிகளின்படியும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ்களுடன் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் புலத்திற்கு நேரில் வந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு www.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) மு.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post