1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு -இரண்டாம் பருவ பயிற்சி இணைய வழியை தொடர்ந்து- நேரடி பயிற்சியாக ஒன்றிய அளவில் வழங்குதல் சார்ந்து- SCERT இயக்குநரின் செயல்முறைகள்
பார்வை(1) இல் காணும் அரசாணையின்படி எண்ணும் எழுத்தும் 1 முதல் 5 ஆம்
வகுப்பிற்கு இரண்டாம் பருவ பாடப்பொருள் சார்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் இணையவழி
மூலம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு. பார்வை(2)இல் உள்ள கடிதத்தின்படி, தொடக்கக் கல்வி
இயக்ககத்திற்கு இணைய வழி பயிற்சியினை ஆசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்துமாறு
கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில், 14.10.2024 முதல் 25.10.2024 வரை TNTP
Portal மூலம் அனைத்து ஆசிரியர்களும் இணையவழி பயிற்சியை வழங்கிடும் வகையில்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே எண்ணும் எழுத்தும் சார்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு
பருவத்திற்கும் மற்றும் 2024-25ஆம் கல்வியாண்டில் முதல் பருவத்திலும் நேரடி பயிற்சியாக
ஆசிரியர்கள் தெளிவுற பயிற்சி பெற்றுள்ள நிலையில், பார்வை (3) இன்படி, எண்ணும் எழுத்தும்
இரண்டாம் பருவத்திற்கான பயிற்சியினையும். நேரடி பயிற்சியாக வழங்கிட பள்ளிக் கல்வி
செயலர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
إرسال تعليق