2023-24ஆம் ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 21 November 2022

2023-24ஆம் ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

2023-24ஆம் ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் தேவைப் பட்டியல் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! /மிக மிக அவசரம்// தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை - 6 ந.க.எண்.61293 /இ/இ3/2022, நாள் 17.11.2022. 


பொருள்: 

பள்ளிக் கல்வி அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 2023-2024- ஆம் கல்வியாண்டு - 1 முதல் 7 ஆம் வகுப்பு (முதல் பருவம்) மற்றும் 8 முதல் 12-ஆம் வகுப்பு (ஒரே பருவம்) முடிய தமிழ் வழி, ஆங்கில வழி, மற்றும் சிறுபான்மை மொழி பாடப்புத்தகங்கள் தேவைப்பட்டியல் கோருதல்-சார்ந்து பார்வை: சென்னை-6, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் உறுப்பினர் செயலரின் கடிதம் ந.க.எண்.9870/MH/ 2022, நாள்.27.09.2022. 

பார்வையில் காணும் கடிதத்தில், அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு 2023-2024-ஆம் கல்வியாண்டிற்கு, பாடப்புத்தகம் மாணவர்களின் உத்தேசத் தேவைப்பட்டியல் அனுப்புமாறு 1 வழங்குவதற்கான தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு, அரசு ! அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 7 ஆம் வகுப்பு (முதல் பருவம்) மற்றும் 8 முதல் 12-ஆம் வகுப்பு (ஒரே பருவம்) முடிய தமிழ் வழி, ஆங்கில வழி, மற்றும் சிறுபான்மை மொழி பாடப்புத்தகங்கள் வழங்கும்பொருட்டு, EMIS மூலம் பெறப்பட்ட மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கை விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 

சார்ந்து, அனைத்து மாவட்ட கட்டுப்பாட்டில் உள்ள கல்வி மேற்காணும் பொருள் அலுவலர்களும், தங்களது மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கையினை, EMIS மூலம் பெறப்பட்ட மாணவ/மாணவியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு, மாணவ/ மாணவியர்களின் எண்ணிக்கையில் மாற்றம் (கூடுதல்/குறைவு) இருந்தால், சரிசெய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில், எந்த கலமும் விடுபடாமல் முழுமையாக பூர்த்தி செய்து, 22.11.2022 க்குள் Dseesection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட பிரதியை குறுந்தகட்டுடன் கீழ்கண்ட நாட்களில் நேரிடையாக இப்பொருள் பார்க்கும் கண்காணிப்பாளர்/பிரிவு உதவியாளர் மூலம் பள்ளிக்கல்வி ஆணையரகத்தில் ஒப்படைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



No comments:

Post a Comment