முதலீடு ஆலோசனை தொழில்நுட்பங்கள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Saturday 6 August 2022

முதலீடு ஆலோசனை தொழில்நுட்பங்கள்

முதலீடு ஆலோசனை தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு தொலைபேசி வழியே தொடர்பு கொண்டிருப்போம். மறுமுனையில் பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதல்படி, எண்களை அழுத்துவதன் மூலம் நமக்கு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம். இப்படி தாமாக குரல்வழி பதில் அளிக்கும் தொழில்நுட்பத்துக்கு பெயர் ஐ.வி.ஆர்.எஸ். தொழில்நுட்பம். 

 வங்கித்துறையில் கம்ப்யூட்டர் அறிமுகமானபோது பலருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்று தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. ஆனால் கால ஓட்டத்தில், ஐ.வி.ஆர்.எஸ். போன்ற தொழில்நுட்பங்கள் இருந்தால்தான் சந்தையில் நிற்க முடியும் என்ற நிலைக்கு நிறுவனங்கள் வந்துள்ளன. இப்போது எல்லாமே ஆன்லைன் மயமாகிவிட்டது. அதனால் எல்லா தேவைகளையும் ஆன்லைன் மூலமே நிறைவேற்ற வாய்ப்புக்கள் உள்ளதா? என எப்போதும் இணையதளத்தில் முட்டிமோதுகிறார்கள்.
 நிதி துறைக்கும் ரோபோ அட்வைசர்ஸ் எனப்படும் தானியங்கி ஆலோசகர்கள் உள்ளனர். இது ஐ.வி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் முன்னேறிய வடிவம்தான். அதாவது தொழில்துறையில் தானியங்கி எந்திர மனிதனின் உபயோகம் எப்படி அதிகரித்துள்ளதோ அதைப்போல நிதி சார்ந்த துறையிலும் இந்த தானியங்கி ஆலோசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உரிய வழியில் முதலீடு செய்வதற்காக இணையத்தில் தேடுவோருக்கு தீர்வளிப்பதாக இருக்கிறது இந்த தொழில்நுட்பம். 
கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து செயல்பாடுகளுமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை, அல்லது முந்தைய நிகழ்வுகளின் ஒப்பீடு அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்படி பணிக்கப்பட்டவை. அல்காரிதம் எனப்படும் கணக்கீடுகளின் அடிப்படையில் நிதி ஆலோசனைகளை இந்த தொழில்நுட்பங்கள் வழங்குகின்றன.

No comments:

Post a Comment