சிறார் திரைப்படம் திரையிடும் போது பள்ளியளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தச் செயல்பாடுகள் (1)

1 ஒவ்வொரு பள்ளியிலும்  சிறார் செயல்பாடுகளுக்கெனஒருஆசிரியருக்குப் பொறுப்புஒதுக்கப்படவேண்டும். 

2. 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை குழுக்களாகப் பிரிக்க வேண்டும் என்று முன்னரே கணக்கிட வேண்டும். 

3. திரைப்படச் 4. ஒரு குழுவாகவோ (6 முதல் 9-ஆம் வகுப்பு) அல்லது இரண்டு குழுக்களாகவோ (6-7 வகுப்புகள் மற்றும் 8-9 வகுப்புகள்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குழுக்களைப் பிரித்து திரையிட்டுக் காட்டலாம். பிற வகுப்பு ஆசிரியர்களையும் இதில் ஈடுபடச் செய்ய வேண்டும். 

4 அனைத்து மாணவர்களும் திரைப்படத்தைக் காணச் செய்ய ஏதுவாக காற்று வசதியுடன் கூடிய போதுமான அறை / இடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்.

 5. திரையிடுதலுக்கு முன் திரைப்படக்காட்டி மற்றும் ஒலிப்பதிவு சாதனங்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்திட வேண்டும். குழந்தைகள் சிறந்த திரைப்பட அனுபவத்தைப் பெறவும், மின் சாதனங்கள்அதிக வெப்பம் அடையாமல் காக்கவும், வெளிப்புற ஒளி குறைவாக இருப்பதையும் போதுமான காற்று வசதி உள்ளதையும் உறுதி செய்திடல் வேண்டும். 
6. திரைப்படக்காட்டி (Projector) / தொலைக்காட்சிப் பெட்டி / ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக வாடகைக்குப் பெற்றுத் திரையிட வேண்டும். 

7. திரைப்படத்திற்காக அனுப்பப்பட்ட இணைப்பிலிருந்து படம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, முந்தைய நாளிலேயே பென்-டிரைவ்/சிடி/டிவிடியில் (Pendrive/CD/DVD) தயாராக வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். 

8. திரைப்படத்தின் சுருக்கத்தைப் பொறுப்பாசிரியர் முன்னரே படித்திருக்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் இருப்பின், அக்குழுக்களின் பொறுப்பாசிரியர்களுக்கும் இதனைப் பகிர்தல் வேண்டும். 

9. மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு மின்னிணைப்புகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து அவற்றை இயக்க வேண்டும். DOWNLOAD FULL PROCEEDINGS

Post a Comment

أحدث أقدم