பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Sunday 9 January 2022

பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள்

பொங்கல் அன்று சமைக்கும் உணவுகளின் பயன்கள் 

எந் ரந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கொண்டாடுவது பொங்கல் விழா. இயற்கைக்கு நன்றி கூறும் | இந்த விழாவில், புதிதாக அறுவடை செய்த அரிசி, காய்கறி, பழங்கள், கிழங்குகள் போன்றவற்றை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். 

பண்டிகை என்றால் பலவிதமான உணவுகள் முக்கிய இடம் பிடிக்கும். அந்த வகையில் பொங்கல் பண்டிகை அன்று சமைக்கும் ஒவ்வொரு உணவும், சுவை மட்டுமில்லாமல் ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை. 

அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். 

பொங்கல் விழாவின்போது சிறு கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பிடி கிழங்கு, கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், வாழைக்காய், அவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், வெள்ளை பூசணி, பூசணிக்காய், சவ் சவ், தக்காளி போன்ற காய்கறிகளைக் கட்டாயம் சமையலில் சேர்ப்பார்கள். 

இவை அனைத் திலும் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் கள், தாது உப்புக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் பச்சரிசி, வெல்லம், நெய், திராட்சை, முந்திரி போன்றவற்றைக் கலந்து தயார் செய்யம் சர்க்கரைப் பொங்கல் பல சத்துக்கள் கொண்டது. பச்சரிசியில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. 

தவிடு நீக்கி, பாலிஷ் செய்யாத அரிசி பல சத்துக்கள் கொண்டது. வெல்லத்தில் போலேட், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் பெண்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை. இந்த சத்துக்கள் மாதவிடாயின்போது ஏற்படும் வலியை நீக்கும் தன்மை கொண்டவை. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. 

உடல் எடை குறைப்புக்கு உதவுபவை ஆகும். நெய் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் உள்ள சத்துக்கள் பார்வைத்திறளை மேம்படுத்தும். தசைகளின் வலிமை மற்றும் சருமப் பொலிவை அதிகரிக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். திராட்சை, முந்திரி போன்றவற்றில் இரும்பு, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பொங்கல் திருநாளன்று பனங்கிழங்கை சுட்டும், வேகவைத்தும் சாப்பிடுவார்கள். அதில் நார்ச்சத்து நிறைந் துள்ளது. இதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். .

No comments:

Post a Comment