திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை. 

மழை பாதிப்பு குறைந்த பின்பு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகளை வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். தனியார் பள்ளிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறை தான். இந்த நடைமுறையே தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

أحدث أقدم