நேரு யுவகேந்திரா சார்பில் குடியரசு தின விழா பேச்சுப்போட்டி வரும் 12ம் தேதி நடக்கிறது 


நேரு யுவகேந்திரா சார்பில் வேலூர் மாவட்ட அளவிலான குடியரசு தின விழா பேச்சுப் போட்டி வரும் டிசம்பர் 12ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக, நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நேரு யுவகேந்திரா வேலூர் மாவட்ட கிளை சார்பில் 2022ம் ஆண்டு குடியரசு தின விழா கொண்டாட்டங்க ளின் ஒரு பகுதியாக, மாவட்ட அளவிலான பேச்சு போட்டி வரும் டிசம்பர் 12ம் தேதி நடக்கிறது. இதில் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்ட தகுதியுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.

மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறுபவர்கள், அடுத்த உயர்நிலை போட்டியில் பங்கேற்க அழைக்கப்படுவார்கள். மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான அறிவிப்பு போட்டியில் 1வது, 2வது மற்றும் 3வது பரிசு பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு காட்பாடி, திருவலம் சாலை விஐடி அருகில் உள்ள நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலரை தொடர்பு கொண்டு முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post a Comment

أحدث أقدم