நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு கல்வித்துறை அறிவுறுத்தல் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Thursday 14 October 2021

நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு கல்வித்துறை அறிவுறுத்தல்

நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு கல்வித்துறை அறிவுறுத்தல் 

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பாடப் பிரிவு தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சில அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப் பிரிவு தொடங்க தேவையான அனுமதிக்கு 50 சதவீதம் பிரிவுகள் கண்டிப்பாக தமிழ்வழிபிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந் தனையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க ளுக்கும் வழங்கலாம். 

ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால், 2 பிரிவுகள் தமிழ்வழி பிரி வாகவும், 2பிரிவுகள் ஆங்கிலவழிபிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம். 3 பிரிவுகள் இருந்தால், 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாக வும், 1 பிரிவு ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங் கலாம். ஒரு பிரிவு மட்டும் செயல்பட்டால், அது தமிழ்வழி பிரிவா கவே செயல்படவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment