வாகனம் ஓட்டும் போது தூங்குபவரா நீங்கள்? - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Thursday 14 October 2021

வாகனம் ஓட்டும் போது தூங்குபவரா நீங்கள்?

குறட்டை என்பது நமது உடல் சோர்வான நிலையில் வருவது என்று பலர் நினைப்பதுண்டு. அது ஒரு ஆபத்தில்லா பிரச்சினை என்றும், நம்பவதுண்டு. . ஆனால் நாம் விடும் குறட்டை, நம் உடலை பாதிக்கக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?, 

நமது குறட்டை நம் ஆயுளை குறைக்கும் என்றால் அதை நம்புவீர்களா ! ஆம் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினைதான் OBSTRUCTIVE SLEEP APNEA! (OSA) ”குறட்டையுடன் கூடிய தூக்கத்தில் மூச்சுத்திணறல்". OSA ஏன் ஏற்படுகிறது என்றும் , அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம். குறட்டை உள்ள அனைவருக்கும் இந்த OSA நோய் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது .அப்படி என்றால் சாதாரண குறட்டைக்கும் , OSA குறட்டைக்கும் உள்ள வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது.. OSA என்பது ஏன் ஏற்படுகிறது? 

 நாம் சுவாசிக்கும் காற்று , நமது மூக்கின் வழியாக உள்ளே சென்று தொண்டை பகுதியை கடந்து நுரையீரலுக்கு செல்லும். நாம் விழிப்புடன் இருக்கும் நேரத்தில் இந்த பாதையில் அடைப்பு ஏற்படாது. ஆனால் தூங்கும்போது அந்த தொண்டை தசைகள் தளர்ந்து, மூச்சு உள்ளே செல்வது தடைப்படும். இந்த தடைப்பட்ட மூச்சுபாதை வழியாக நாம் மூச்சுவிடும் போது வரும் சத்தம் தான் “குறட்டை“ 

 OSA வின் அறிகுறிகள் என்ன ?

 1, தூக்கத்தின் போது அதிகப்படியான குறட்டை. 

 2, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல் உணர்தல். 

 3, தூங்கும் போது மூச்சுவிடுவதை நிறுத்துவது.. 

 4, பகல் நேரத்தில் அதிகமாக தூக்கம் வருதல். 

 5, காலை எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது. 

 6,அதிகமான மறதி, சோர்வு, ஆர்வமின்மை ஏற்படுவது. 

 7,தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமை. 

 8, வாகனம் ஓட்டும் போது தூக்கம் வருவது. 

 9,அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது கூட தூக்கம் வருவது. 

 10, காலை எழுந்தவுடன் நாக்கு வறண்டு போய், தொண்டையோடு ஒட்டிபோன உணர்வுடன் தாகம் எடுத்தல். மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளுள் 3 க்கு மேல் இருந்தால் உங்களுக்கு OSA இருக்க வாய்ப்புள்ளது. OSA வினால் உண்டாகும் பாதிப்புகள் என்ன ? சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், பக்கவாதம், குழந்தையின்மை, ஞாபக மறதி, திடீர் மரணம் ஆகியன ஆகும். 

குறட்டை விடுபவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அதன் வீரியம் மிகக்கடுமையானதாக இருக்கும். மருத்துவமனையில் ICU வார்டில் உள்ள பலர் இந்த OSA வால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவர்களில் பலருக்கு செயற்கை சுவாசக்கருவி ( வென்டிலேட்டர் ) பொருத்தியும் பயனளிக்கவில்லை. 

 எனவே மேற்கண்ட OSA அறிகுறிகள் உள்ளவர்கள் தக்கநேரத்தில் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும் என கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோவன் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மருத்துவ மையத்தின் தலைமை நுரையீரல் மருத்துவர் பால.கலைக்கோவன் கூறினார்.

No comments:

Post a Comment