இந்தியாவில், நான்கில் ஒருவர் மாரடைப்பால் இறப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மரணங்கள் மிகச் சாதாரணமாக நடக் கின்றன. மாரடைப்பு ஏற்படப் போவதை முன்கூட்டியே அறிவது எப்படி என இங்கு பார்ப்போம். அறிகுறிகள்: வயிற்றுப் பகுதியிலிருந்து வலி தோன்றி, தொண்டை வரை பரவக்கூடும். 

தொண்டைப் பகுதி யிலிருந்து வலி தோன்றி, மார்புப் பகுதிக்குப் பரவி, வயிற்றுப் பகுதியில் முடிவுறும். மற்றும் மார்பின் இடது அல்லது வலது புறம் தாங்க முடியாத வலி தோன்றும். சிலருக்கு வாந்தி ஏற்படும். தாங்க முடியாத அளவுக்கு முதுகு, தோள் பட்டை, கை தவிர தாடையில் வலி ஏற்படும். மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். வலி தோன்றியவுடன் நடந்தால், அது வலியை மேலும் அதிகமாக்கும். இதுவே மாரடைப்பு வருவதற்கான முதல் மற்றும் முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தோன்றிய உடனே, மருத்து வரை அணுகுவது நல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் வலி ஏற்படுவதில்லை. 

மாறாக, அளவுக்கு அதிகமான வியர்வை வெளி வரும். உடல் சோர்வாக இருக்கும். இதயப் பகுதியில் பாரமாக உணர்வார்கள். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடலில் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் 60 வயதைக் கடந்த முதியோர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்  கூறுகள் உள்ளன. 

எனவே அவர்களை கவனமுடன் கண்காணிப்பது நல்லது. முதலுதவிகள்: மாரடைப்பு நோய் உள்ளவர்கள், அறிகுறிகள் தோன்றிய அடுத்த கணமே, மருத்துவ ஆலோசனைப் பெற வேண்டும். மூச்சு விட முடியாமல் திணறி மயக்கம் அடையும்போது அருகில் இருப்பவர்கள் அவரின் மார்பு பகுதியில் உள்ள இறுக்கமான ஆடைகளை தளர்த்தி, சி.பி.ஆர் எனப்படும் இதய இயக்க சிகிச்சையை தரலாம். 

மார்பு பகுதியின் மேல் இரு கைகளையும் வைத்து அழுத்த வேண்டும். பாதிப்புக்குள்ளானவரை சூழ்ந்து நிற்காமல் காற்றோட் டமான இடத்தில் படுக்க வைத்து, ஆக்சிஜனை சுவாசிக்க வைக்க வேண்டும். வருமுன் காப்போம்.. ஆரோக்கியமான வாழ்விற்கு வருமுன் காத்தலே சிறந்ததாகும். எனவே மாரடைப்பைத் தவிர்ப்பதற்கு, அதிக எண்ணெய்யில் சமைத்த பொருட்களை குறை வாக சாப்பிட வேண்டும். அடிக்கடி சமையல் எண் ணெய்யை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 

ஒரே வகையான எண்ணெய்யில் உணவு சமைப்பதை தவிர்க்க வேண்டும். கீரை வகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது. சிறு சிறு உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமின்றி, மனதுக்கும் நன்மை பயக்கும்.

Post a Comment

أحدث أقدم