ஓய்வூதிய வயதை நெருங்கும் ஊழியர்களுக்கான முக்கியமான திட்டம் தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். நீங்கள் அமைப்புசாரா துறையில் பணியாளராக இருந்தால், முதுமை காலத்தில் தினசரி செலவுகளை நிர்வகிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வீர்கள். 

ஓய்வு காலத்தில் பண ரீதியாக சிரமம் இல்லாமல் வாழவும், உங்கள் அன்றாட செலவுகளை பூர்த்தி செய்யவும் தபால் அலுவலக திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த திட்டத்தின் மூலம் ஓய்வூதிய வசதியின் அதிகபட்ச பலனை பெற முடியும். இந்திய தபால் துறையின் பிபிஎஃப் (பொது வருங்கால வைப்பு நிதி) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமானம் மற்றும் வரிச் சலுகைகளும் கிடைக்கும். பிபிஎஃப் கணக்கைத் துவங்க குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம் அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள முக்கிய அம்சமே வட்டி விகிதம் தான். PPF மீதான தற்போதைய வட்டி விகிதம் 7.1 சதவீதமாகும் (மார்ச் 31, 2021 உடன் முடிவடைந்த காலாண்டில்)

 .இது மற்ற வங்கி மற்றும் சிறிய சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டியை விட அதிகமாகும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15ஆண்டுகள் ஆகும். பிபிஎஃப் கணக்கைத் துவங்கிய 3வது ஆண்டிலிருந்து கடன் பெறலாம். நிலுவைத் தொகையில் 25% முதல் நிதியாண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 % இருக்கலாம். அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post