குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கு ஆம்லெட் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 21 September 2021

குழந்தைகளுக்கு விருப்பமான உருளைகிழங்கு ஆம்லெட்

குழந்தைகளுக்கு வித்தியாசமான முறையில் ஆம்லெட் செய்து கொடுக்கவிரும்பினால் உருளைக்கிழங்கு சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம் வாங்க... 


 தேவையான பொருட்கள் 

முட்டை - 5 

உருளைக்கிழங்கு - 2 

மிளகாய் - 5 

பெ.வெங்காயம் - 1 

வெண்ணெய் - சிறிதளவு 

உப்பு - தேவைக்கு 

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு 

செய்முறை :
முதலில் கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்

No comments:

Post a Comment