அரசின் ஆதிதிராவிடர் விடுதிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் 17 பணியிடங்கள் நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கீழ், 25 அரசின் பள்ளி மற்றும் கல்லுாரி விடுதிகள் செயல்படுகின்றன. இதில், 17 விடுதிகளில் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, 12 பெண்கள் உட்பட, 17 துாய்மை பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு, தகுதியுள்ள நிறுவனங்கள், துாய்மை பணியாளர்களின் விபரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், ஆதிதிராவிடர் நலத்துறையில் பெற்று, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
إرسال تعليق