வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து 75 வயதைக் கடந்தோர் விலக்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசுவெளியிட்டுள்ளது. ஓய்வூதியம்வாயிலாக 75 வயதைக்கடந்த மூத்தகுடி மக்கள் பெறும்வரு மானம், அதே வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வாயிலாக அவர்கள் பெறும் வட்டி ஆகியவற்றுக்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வ தில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.


 அதற்கான விதிமுறைகளையும் விண்ணப்பங்களையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை ஓய்வூதியத் தொகையை விநியோகிக்கும் வங்கியின் மூலமாக மூத்த குடி மக்கள் பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கியி டமே மீண்டும் வழங்க வேண்டும். அதைத் தொடர்ந்து, மூத்த குடிமக் கள் பெறும் வருமானத்துக்கான வரியை சம்பந்தப்பட்டவங்கியே பிடித் தம் செய்து, அதை அரசிடம் செலுத்திவிடும்.

 நிரந்தர வைப்புத் தொகைக் கான வட்டி வருமானத்தை, ஓய்வூதியத்தை விநியோகிக்கும் வங்கியின் வாயிலாகப் பெறும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என்றும் விதிகளில் குறிப்பிடப்பட் டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக வருமானம் பெறும் 75 வயதைக் கடந்தோர், இத்திட்டத்தின் வாயிலாகவருமானவரி கணக்கு தாக்கல் செய்வது எளிதாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post