வனஉயிரின வாரத்தை முன்னிட்டுபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், ஸ்லோகன் போட்டிகளை மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. 

வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும், வன உயிரின வாரம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வன உயிரின வாரம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாவட்ட வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 

இதுதொடர்பாக, மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார் கூறும்போது, “ஓவியபோட்டியில் எல்கேஜி முதல் கல்லூரி மாணவர்கள் வரை பங்கேற்கலாம். இதற்காக ‘ஏ’ முதல் ‘எப்’ வரை குழுக்களாக பிரிக்கப்படுவர். ஓவியப்போட்டிகளில், ஒருவர், ஒரு ஓவியத்தை அனுப்பலாம். ஓவியங்கள் வரைய பென்சில்,ஸ்கெட்ச், கிரையான்ஸ், வாட்டர்பெயிண்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். ஓவியங்களை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். 

ஸ்லோகன் போட்டிகளில் குழு ‘ஏ’ முதல் ‘எப்’ வரை உள்ள அனைவரும் பங்கேற்கலாம். ஒவ்வொருவரும் மூன்று ஸ்லோகன்களை அனுப்பலாம். மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், மாணவரின் புகைப்படம், மொபைல் எண், ஓவியம், ஸ்லோகன் உடன் அனுப்பப்பட வேண்டும். ‘கோ-எக்ஸிட் வித் வைல்டுலைஃப்’ என்ற தலைப்பின்கீழ் வரையப்பட்ட ஓவியங்கள், ‘பாரஸ்ட், வைல்டு லைப் கன்சர்வேஷன்’ என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்ட ஸ்லோகன்களை வரும் 28-ம் தேதி (நாளை) மாலை 5 மணிக்குள் wildlifeweek.cbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9566686886, 9488977753 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.

Post a Comment

أحدث أقدم