தினமும் பழங்கள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !! - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 21 September 2021

தினமும் பழங்கள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!

பொதுவாக பழங்கள் நார்ச் சத்து, நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியவை. அதோடு நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் பைடோ கெமிக்கல்ஸ் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். 

 பழங்களில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்துவயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. 

இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எந்தவகையான பழங்கள் என்றாலும் சரி ஒரு கப் அளவு பழங்களை அதாவது 250 கிராம் அளவிற்கு தினமும் சாப்பிடுவதை கட்டாயமாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால்எந்த வகையான நோய்களையும் வராமல் தவிர்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகமாகும். ஜீரண உறுப்புகள் நன்றாக வேலை செய்யும். நச்சுக்கள் வெளியேறும். உடல்உறுப்புகள் சுத்தமாகும். கண் பார்வை தெளிவாகும். 

முதுமை தள்ளிப் போகும். இவிய நோய்களை தடுப்பது மட்டுமல்ல, நோய்களை குணப்படுத்தவும் செய்கிறது. ரத்த சோகைக்கு : அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். 

பித்த நோய்கள் : விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் கிருமிகளை அழிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

No comments:

Post a Comment