டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் புதிய நடைமுறை?
அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் 30-க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது.
அந்தவகையில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிட்டப்படி தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இதையடுத்து அந்த தேர்வுகளை நடத்துவது குறித்தும், தேர்வுகளில் ஏதேனும் புதிய நடைமுறைகள் கொண்டு வருவது குறித்தும் சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசந்திரன் தலைமையில், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
அதில் தமிழகத்தில் அரசு பணிகளில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் பலர் சேருவதாகவும், இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய நடைமுறையில் தேர்வு நடத்த டி.என்.பி.எஸ்.சி. திட்டமிட்டு அதற்கான செயல்முறைகளை அரசுக்கு பரிந்துரைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அதன்படி தேர்வுகளை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். மேலும், அரசின் அனுமதி ஓரிரு வாரங்களில் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதனை அடிப்படையாக கொண்டு துறை வாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் பட்டியலுடன் தேர்வு குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் (அக்டோபர்) இறுதிக்குள் வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
إرسال تعليق