மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சி, கற்றல், கற்பித்தல், தொழில்முறைப் பயிற்சி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகத்திற்கு தரவரிசை பட்டியல் வெளியிட்டு விருது வழங்கி வருகிறது.
இந்தநிலையில் இந்த ஆண்டு கல்வி அமைச்சகம் தரவரிசைப்பட்டியலில் இந்தியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு 50-வது இடம் கிடைத்துள்ளது. தொழில் பிரிவில் 74-வது இடத்தையும் பெற்றுள்ளது. இதையொட்டி வேந்தர் ஸ்ரீதரன், துணைத்தலைவர் சசி ஆனந்த், துணைத்தலைவர் அர்ஜுன், கலசலிங்கம் நிர்வாக இயக்குனர் அறிவழகி, துணைவேந்தர் நாகராஜன், பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் தரவரிசை பட்டியலில் கொண்டுவர அயராது உழைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு, வாழ்த்துகளை தெரிவித்தனர்
Post a Comment