ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான நுழைவுத்தேர்வு டிசம்பர் மாதம் நடக்கிறது. இதுகுறித்து ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் வணிகப்பிரிவு துணைத்தலைவர் அஸ்வின்குமார் சின்கா, துணை இயக்குனர் சஞ்சய்காந்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு பயிற்சி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட ஆகாஷ் கல்வி நிறுவன பயிற்சி மையங்களில் ஆண்டுக்கு 2½ லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜே.இ.இ., நீட் தேர்வு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு படித்து வருகின்றனர். 

 மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்து உயர்கல்வி நிறுவனங்களில் அவர்கள் கல்வி பயில உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். அதன்படி, 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தி அவர்களில் திறமையான மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி அளிக்கிறோம். கட்டண சலுகை இந்த ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு டிசம்பர் 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இந்தியா முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடக்கிறது. ஆன்லைன் முறையிலும், நேரடியாகவும் தேர்வு நடத்தப்படுகிறது. 

 தற்போது இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. திறமையான மாணவர்களுக்கு 100 சதவீத கட்டண சலுகையுடன், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் என ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பயிற்சி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. 23 லட்சம் பேருக்கு உதவித்தொகை அனைத்து வகுப்புகளிலும் சிறப்பான மதிப்பெண் பெறும் 5 சிறந்த மாணவர்கள் பெற்றோருடன் நாசாவுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படுவர். 2010-ம் ஆண்டில் இருந்து இந்த நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறோம். 

தற்போது வரை 23 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் உதவித்தொகையை பெற்று பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு 3 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது பகுதி வணிகப்பிரிவு தலைவர் பிரதீப் உன்னிகிருஷ்ணன், அடையாறு கிளை தலைவர் சக்தி கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

أحدث أقدم