விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில்
தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் ஒத்துழைப்புடன் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் (தென்மண்டலம்) இணைந்து இணையதளம் மூலமாக
தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், சிவில் என்ஜினீயரிங்) 2019, 2020, 2021-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதளத்தை பார்க்கவும். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க கடைசி நாள் 16.10.2021 ஆகும். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
إرسال تعليق