உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Monday 27 September 2021

உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை

உதட்டிலுள்ள கருமையைப் போக்கும் புதினா இலை..... 


சில ஆண்கள் சிகரெட் குடித்து உதடுகள் கருமையாக இருக்கும் அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும். எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில் பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும். 

முகம் வறட்சியினை போக்க, கொத்தமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம். இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும். புதினா இலைகளை அரைத்து தடவி விட்டு 10 நிமிடங்கள் கழித்து காய்ந்ததும் குளித்து வந்தால் முகம் மற்றும் மேனி கருமை நிறம் குறைந்து பளபளப்பாகும். 

புதினா இலைகளின் சாறு எடுத்து முகத்தில் தடவினால் முகப்பரு மாறுவதுடன் முகம் பளபளக்கும். இரவு படுக்கைக்குச் செல்லும்முன் புதினா சாறு எடுத்து அதில் சம அளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து அதில் பயற்றம் மாவு சேர்த்து குழைத்து முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுத்தால் முகம் பளபளக்கும். சிறிது புதினாவுடன் தயிர் கலந்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். முகத்தில் தடவி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவினால் முகத்திலுள்ள கருப்புத் திட்டுகள் மாயமாக மறையும்.

No comments:

Post a Comment