பல்வகை தொழில்நுட்ப(பாலிடெக்னிக்) தேர்வு முடிவுகள் வெளியீடு


செய்தி வெளியீடு எண்: 667 நாள் 31.08.2021 

செய்தி வெளியீடு 



மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக இரண்டாம், நான்காம், ஆறாம் மற்றும் எட்டாம் பருவம் பயின்ற மாணாக்கர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் இன்று (31.08.2021) வெளியிடப்படுகிறது. மேற்படி தேர்வுகள் கடந்த ஜூன் 2021 மற்றும் ஜூலை 2021 ஆகிய மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்டது. மொத்தம் 2,96,886 மாணாக்கர்களில் 2,71,636 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.49 ஆகும். 24,968 மாணாக்கர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், 282 மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Post a Comment

أحدث أقدم