தனியார் பள்ளியில் படித்த மகனை, அரசு
பள்ளி ஆசிரியர், தான் பணியாற்றும் பள்ளியில்
சேர்த்தார். தர்மபுரி, அதியமான் நகரை சேர்ந்தவர்
புகழேந்தி. இவர், தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி
ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் லத்தீப், 12. இவர், நாமக்கல்லில்
உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து
வந்தார். அவரை, தான் பணியாற்றும் இலக்கியம்
பட்டி அரசு பள்ளியில், தலைமை ஆசிரியர் செந்த
மிழ்செல்வி முன்னிலையில் நேற்று, ஏழாம் வகுப்பு
ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்தார்.
தனியார் பள்ளியில் படித்த மகனை அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரியர்!
INSTAKALVI
0
تعليقات
Tags
General News

إرسال تعليق