பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி அந்தந்த பள்ளிகளில் நேற்று தொடங்கியது. 

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியானதும் அவர்கள் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க வசதியாக உடனடியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் 17-ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும் அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 

அதன்படி, மாணவர்கள் தங்கள் பள்ளியில் அசல் மதிப்பெண் சான்றிதழை நேற்று பெற்றுக்கொண்டனர். 

தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தபடி, மதிப் பெண் சான்றிதழ் வாங்க வந்த மாணவர்களும், பெற் றோரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளி யைப் பின்பற்றி வாங்கிச் சென்றனர்.

Post a Comment

Previous Post Next Post