2019-2021-ம் ஆண்டில் படித்த மாணவர்களுக்கான பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 17-ந்தேதி முதல் பள்ளிகளில் வழங்கப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2019-21-ம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி படித்த பள்ளி 

மாணவர்களுக்கான, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகிற 17-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ்களை பெற பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள், பெற்றோர் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். பள்ளியில் தேர்வர்கள், பெற்றோர் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post