6 மாதத்தில்... 500 படிப்புகளை முடித்த கேரள மாணவி..! 


கொரோனா பொது முடக்கத்தின்போது, 500 படிப்புகளை படித்து சாதனை படைத்துள்ளார், கேரள மாணவி சோனா பெல்சன். இவர், திருவனந்தபுரத்தில் உள்ள மார் இவானியோஸ் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா பொது முடக்கத்தையொட்டி, 500 அடிப்படை படிப்புகளைப் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது. இதில், சோனா பெல்சனும் பங்கேற்று, படித்து, பட்டம் பெற்றிருக்கிறார். 

இதையும் படிக்கவும் :
 ‘‘பொது முடக்கத்தையொட்டி, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இலவச இணைய வழி படிப்பைப் பல்கலைக்கழக மானியக் குழு அறிமுகப்படுத்தியது. எங்கள் வாட்ஸ் ஆப் குழுவில், இது குறித்த தகவலை எங்கள் ஆசிரியை தீபா அனுப்பினார். எதிர்காலப் படிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், இந்தப் படிப்புகளுக்கு உடனே பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நானும் பதிவு செய்தேன். 90 நாட்களில் 500 அடிப்படை படிப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன்” என்றார். கல்லுமலாவில் உள்ள கலைக்கல்லூரியில் பணியாற்றும் பொருளாதார உதவிப் பேராசிரியர் அனிஷ்குமார் கூறும்போது, ‘‘உலகம் முழுவதிலும் இருந்து 124 பல்கலைக்கழகங்கள் அடிப்படை படிப்புகளுக்கான தேர்வை நடத்தின. 

வழக்கமாக ஒரு படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். எனினும், கொரோனாவையொட்டி, மாணவர்கள் இலவசமாகப் படிக்க பல்கலைக்கழக மானியக் குழு ஏற்பாடு செய்திருந்தது. எந்தப் படிப்பை வேண்டுமானாலும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். சில மாணவர்கள் 50 படிப்புகளை முடித்துள்ளனர். சோனாவோ, 500 படிப்புகளை முடித்திருக்கிறார். சோனாவின் சாதனையால் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post