NCERT - ல் செயலாளர் பதவி | சம்பளம் 1,18,500 - 2,14,100 | தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் - EDUNTZ

Latest

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

Search here

Tuesday 27 July 2021

NCERT - ல் செயலாளர் பதவி | சம்பளம் 1,18,500 - 2,14,100 | தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசு கல்வி அமைச்சகம் (பள்ளி கல்வி & எழுத்தறிவு துறை) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்' (NCERT), புதுடெல்லியில் செயலாளர் பதவிக்கான விளம்பரம் 


கிரேடு சம்பளம் ரூ.8700/- உடன் பேமேட்ரிக்ஸ் சம்பள நிலை-13 (ரூ.1,18,500-2,14,100) (முன்னர் மாற்றியமைக்கப்பட்ட சம்பள கட்டமைப்பு ரூ.37,400-67,000 (PB-4)-ல் NCERT, செயலாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி நியமனம் ஆனது டெபுடேசன் அடிப்படையில் பணியிட மாற்றம் மூலம் அல்லது ஐந்து வருட காலத்திற்கு குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் அல்லது அபேட்சகர்களின் 60 வயது வரை அல்லது அவன்/அவளது தாய் நிறுவனத்தில் அவன்/ அவளது வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை, இதில் எது முந்தியதோ அந்த காலத்திற்கு இருக்கும். 

தேர்ந்தெடுத்தல் நடைமுறையானது தேர்வு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும். தகுதிகூறு மற்றும் இதர விபரங்களுக்கு 31 ஜூலை 2021-ந் தேதியிட்ட எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் உள்ள எங்களது விளம்பரத்தை பார்க்கவும் மற்றும் NCERT இணையதளம் www.ncert.nic.in-ஐ பார்க்கவும். இணைத்துள்ள மாதிரி படிவத்தில் முறையாக தயாரிக்கப்பட்டு A4 அளவு பேப்பரில் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் 

திரு.T.S.ரவ்தலா, 
இயக்குனர், 
கல்வி அமைச்சகம், 
பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, 
அறை எண் 503-D, 
சாஸ்திரி பவன், 
புதுடெல்லி-110001 

அவர்களுக்கு உரிய முறை மூலம் எம்ப்ளாய்மெண்ட் நியூஸில் விளம்பரம் பிரசுரிக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வந்து சேர வேண்டும்.

No comments:

Post a Comment