தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை வெளிப்படைத் தன்மையுடன் திறமையாக இயங்க வேண்டும் என்ற நோக்கில் ரூ.28 கோடியே 31 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 1,213 மடிக்கணினிகள் மற்றும் 1,484 கணினிகளை அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக அவர் 7 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் பி.கணேசன், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் பி.ஆர்.குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم