'அமேசான் கிண்டில்' போட்டி முடிவு வெளியீடு
மிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 'அமேசான் கிண்டில்' நிறுவனம் நடத்திய புனைவு எழுத்தாளர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியாகி உள்ளன
'அமேசான் கிண்டில்' நிறுவனம் புனைவு எழுத்தாளர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன், நான்காம் ஆண்டு போட்டி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் தமிழ் நாவல் பிரிவில் எழுத்தாளர் அராத்து எழுதிய 'ஓப்பன் பண்ணா' என்ற நாவல் பரிசு பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் அபெக் ஷா ராவ் எழுதிய 'தி மஹாராஜாஸ் பேக் பியான்ஸி' மற்றும் ஹிந்தியில் தீப்தி மிட்டல் எழுதிய 'ஓயே மாஸ்டர் கே லாண்ட்' என்ற நாவலும் பரிசு பெற்றுள்ளன.குறுநாவலுக்கான தமிழ் பிரிவில் எழுத்தாளர் சசிகலா முருகேசன் எழுதிய 'தாயுமானவன்' பரிசு பெற்றுள்ளது.
நாவலுக்கான பரிசு பெற்றவர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாயும், குறுநாவலுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றன.
إرسال تعليق