பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும் சூழலை ஏற்படுத்துங்கள் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு முதல்வர் அறிவுறுத்தல் 

பொறியியல் படிப்பை நிறைவு செய் வோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென தகவல் தொழில்நுட்பத் துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செய லகத்தில் அவர் திங்கள்கிழமை ஆலோ சனை நடத்தினார். 

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:- அரசுத் துறைகளில் காகிதப் பயன்பாட்டைக் குறைத் திட மின்னணு அலுவலக மென்பொருளை பயன்படுத்த நடவடிக்கை வேண்டும். அரசுத் துறைகளில் தமிழ் ஒருங்கு றியின் பயன்பாடு, கணினித் தமிழ் வளர்ச்சி, மாநிலத்தின் அனைத்துக் கிராமங்களையும் கண்ணாடி இழை வலைய மைப்பு மூலம் இணைக்க உதவும் பாரத்நெட் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அரசுத் துறை அலு வலர்களுக்கு உயர் தொழில்நுட்பங்களில் பயிற்சியளிக்க வேண்டும். 

தமிழகத்தில் 14 இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங் காக்கள் அமைத்திட வேண்டும். அதற்கான சாத்தியக்கூறு களை ஆராய வேண்டும். மாநிலத்தில் ஒவ்வொரு ஆண் டும் சுமார் 4 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து வெளியே வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை பெற்றிட புதிய சூழலை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலமே மாநிலம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய முடியும். அரசுத் துறைகளின் சேவைகளை இணைய வழியில் பெற்றிடும் வகையில் குறிப்பாக தமிழ் மொழி வாயிலாகக் கிடைத்திட வகை செய்திட வேண்டும். உலகத் தமிழர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இணைய வழித் தமிழ் மொழியைக் கற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். 


Post a Comment

Previous Post Next Post