திருவெண்காடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சாலையின் இருபுறமும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதை பார்த்த மு.க.ஸ்டாலின் காரை விட்டு இறங்கி, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 200 மீட்டர் தூரத்துக்கு நடந்தே சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் இருந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதனால் உற்சாகம் அடைந்த மக்கள், அவரிடம் பேசவும், மனு கொடுக்கவும் அலைமோதினர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பொறுமையாக மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கனிவுடன் பேசினார். இது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags
Trending News
إرسال تعليق