பெங்களூருவிலிருந்து பதவி உயர்வு பெற்று மாற்றுதலாகி வந்த சுபஸ்ரீ அனந்த்கிருஷ்ணன், தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல வருமானவரி அலுவலகத்தின் முதன்மை தலைமை கமிஷனராக, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர், 1987-ம் ஆண்டு இந்திய வருவாய் பணி (ஐ.ஆர்.எஸ்.) பிரிவை சேர்ந்தவர். வருமானவரித்துறையின் மும்பை, ஐதராபாத், கொச்சி மற்றும் பெங்களூரு நகர அலுவலகங்களில் உள்ள அலுவலகங்களில் பல்வேறு நிலைகளில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். மேற்கண்ட தகவல்களை நிர்வாக பிரிவு கூடுதல் கமிஷனர் பா.திவாகரன் தெரிவித்து உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post