தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப் பிரமணியன் கூறியதாவது: ஒருங்கிணைந்த 5 ஆண்டு (எம்.ஏ) தமிழ் இலக்கிய பாடப்பிரி வில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும்ரூ.2ஆயிரம் ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகி றது. 

இதில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க லாம்.2 ஆண்டு முதுகலைத்தமிழ் படிப்பில் சேரும் மாணவர்களுக் கும் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப் படுகிறது. அத்துடன், முதுகலை யில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், மொழியியல், மெய் யியல், நிகழ்த்துக் கலை மற்றும் சுற்றுச்சூழல், மூலிகை அறிவியல் ஆகிய படிப்புகளுக்கும் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. விவரங்களுக்கு www.tamiluniversity.ac.in என்ற முகவரியை பார்க்கலாம் என்று துணைவேந்தர் கூறியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post