பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு 

பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டித்து தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் உத்தர விட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக் னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதி நேரப் படிப்புகளில் சேர்வதற்கு ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதி வரை ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. 

இந்த அறிவிப்பின் பேரில் மாணவர்கள் கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலை யில் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு மு டிவுகள் 19ம் தேதி வெளியிடப்பட்ட நிலை யில், பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு, பகுதி நேர படிப்புகளுக்கு விண் ணப்பிக்கும் தேதி தற்போது நீட்டிக்கப்பட் டுள்ளது. இதற்கான இறுதி நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. SOURCE NEWS

Post a Comment

Previous Post Next Post