தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான, 'புத்தக பூங்கொத்து' திட்டத்தின், கதை புத்தக தொகுப்பு, அனிமேஷன் படங்களை உள்ளடக்கி தயாரிக்கப்படுகிறது.மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, பள்ளிகளில், புத்தக பூங்கொத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 


பள்ளிக்கல்வித்துறை வாயிலாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை வகுப்புகளுக்கு, படங்களுடன் கூடிய புத்தகங்கள் அச்சிட்டு வினியோகம் செய்யப்படுகின்றன.அதன்படி, கதைகள், அறிவியல் கருத்துகள், புதிர்கள் என, பல்வேறு பிரிவுகளில், புத்தக தொகுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. 

அதில், கதைகள் அடங்கிய தொகுப்புகள், தற்போது, 'அனிமேஷன்' படங்களை உள்ளடக்கி, 'காமிக்ஸ்' வடிவில் தயாரிக்கப்படுகிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'செயல்வழி கற்றல் முறையில், பாடத்திட்டங்களை விளக்க, பூங்கொத்து திட்டம் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. அனிமேஷன் படங்களுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், தயாரிக்கப்படுகிறது. புத்தகம், வீடியோ, கியூஆர் கோடு பயன்பாடு என, மூன்று பிரிவுகளில் கதைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் பலர், அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்' என்றனர்.

Post a Comment

أحدث أقدم